நடிகர் கருணாஸ், புதியவர்களை அறிமுகப்படுத்துவதற்காக இண்டியன் சினி வே என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் ‘மேதகு’ கிட்டு இயக்கியுள்ள ‘சல்லியர்கள்’ படத்தைத் தயாரித்துள்ளார்.
இதையடுத்து ‘பிரசிடென்ட்’ என்ற படத்தைத் தயாரிக்கிறார். இதுபற்றி கருணாஸிடம் கேட்டபோது கூறியதாவது: கிராமத்துப் பின்னணியில் உருவாகும் அரசியல் நையாண்டி படமாக இருக்கும். சத்தியமூர்த்தி என்பவர் இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இதில் நான் கிராமத்து ‘பிரசிடென்ட்’ கேரக்டரில் நடிக்கிறேன். நடிகர் விமல் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். மனோ என்ற புதுமுகம் நாயகனாக நடிக்கிறார். சானியா ஐயர் நாயகி. முனீஷ்காந்த், காளி வெங்கட், ராமர் உட்பட பலர் நடிக்கின்றனர். வரும் 16ம் தேதி சாயல்குடி அருகே படப்பிடிப்பு தொடங்குகிறது.
இது வழக்கமான படமாக இல்லாமல், ரசிகர்களுக்கு பிடித்தப்படமாக இருக்கும். நல்லக் கதைகளைத் தேர்வு செய்து தொடர்ந்து படங்கள் தயாரிக்க இருக்கிறேன். இவ்வாறு கருணாஸ் கூறினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
29 mins ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago