நடிகர் சங்க கட்டிடத்தில் விஜயகாந்துக்கு பாராட்டு விழா: விஷால் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: புதிதாக கட்டப்படும் நடிகர் சங்க கட்டிடத்தில் நடிகர் விஜயகாந்துக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படம் ‘மார்க் ஆண்டனி’. எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்து இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், “நடிகர் சங்க கட்டிடத்திற்கான பணிகளை முறையாக செய்ய வேண்டும் என நினைக்கிறோம். முதலில் அந்தக் கட்டடத்திற்காக விஜயகாந்தின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவரின் உழைப்புதான் அந்த கட்டிடம். அவருக்கு கொடுக்கவேண்டிய அங்கீகாரம் அந்த நிலத்தில் வைத்து கொடுக்கப்படும். நடிகர் சங்கத்தின் பத்திரத்தை மீட்ட அவரின் உழைப்புக்கு மரியாதை அளிக்கும் விதமாக பாராட்டு விழா நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்