‘சீதாராமம்’ பட இயக்குநருடன் கைகோக்கும் நடிகர் சூர்யா?

By செய்திப்பிரிவு

‘சீதா ராமம்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஹனு ராகவபடி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘வீரம்’, ‘விஸ்வாசம்’, ‘அண்ணாத்த’ படங்களை இயக்கிய இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். ‘சூர்யா42’ என அழைக்கப்படும் இப்படத்தில் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறனுடன் நடிகர் சூர்யா ‘வாடிவாசல்’ படத்திற்காக இணைகிறார். இந்த இரு படங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யா ‘சீதா ராமம்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஹனு ராகவபடி இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும், பான் இந்தியா படமாக அது உருவாக உள்ளதாகவும், படத்தை தெலுங்கின் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சினிமா

38 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்