‘மெமரீஸ்’ திரைப்படம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்: நடிகர் வெற்றி

By செய்திப்பிரிவு

மெமரீஸ் திரைப்படம் சைக்கோ த்ரில்லராக ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் என்று படத்தின் நாயகன் வெற்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் வெற்றி நடிப்பில், இயக்குநர்கள் ஷியாம் மற்றும் ப்ரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெமரீஸ்’. மார்ச் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. வசனகர்த்தா அஜயன் பாலா பேசுகையில், “லாக்டவுன் முன்பாக இயக்குநர்கள் என்னைப் பார்க்க வந்தார்கள். அவர்கள் கதை சொன்ன போது நாம் கணிக்க முடியாத திருப்பங்கள் நிறைய இருந்தது. ப்ரவீன் ஷியாம் இருவரையும் கொஞ்சம் விட்டால் நம்மை குழப்பி விடுவார்கள். இது நான் லீனியரில் ஒரு மாறுபட்ட சைக்கோ திரில்லராக இருக்கும். வெற்றி-யின் திரை வாழ்வில் இது முக்கியமான படமாக இருக்கும். உங்களைப் பல இடங்களில் ஆச்சரியப்படுத்தும்” என்றார்.

நடிகர் வெற்றி பேசுகையில், “எட்டு தோட்டாக்கள் முடிந்த உடனே இந்த கதையை என்னிடம் சொன்னார்கள். 2 வருடம் பேசிக்கொண்டே இருந்தோம். அந்த நேரத்தில் வேறு ஹீரோவை வைத்துப் பண்ணுங்கள் என்று சொன்னேன். ஆனால் நான் தான் வேண்டும் என வெயிட் பண்ணி இந்தப்படம் எடுத்துள்ளார்கள். என்னை நம்பியதற்காக இயக்குநர்களுக்கு நன்றி. முழுக்க அடர்ந்த காட்டுக்குள், கஷ்டப்பட்டு படம் பிடித்துள்ளோம். எனக்கு இதில் 4 தோற்றங்கள். படம் நன்றாக வந்துள்ளது. படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி” என்றார்.

இயக்குநர் ஷியாம் பேசியதாவது, “நான் மலையாளி, தமிழில் படம் செய்துள்ளேன். இக்கதைக்காகக் கேரளாவில் தயாரிப்பாளரைத் தேடியபோது யாரும் ஒப்புக் கொள்ளவில்லை. வெற்றி நாயகனாக நடிக்கிறார் என்று கூறியபோது ஷிஜு சார் ஜீவி படம் பார்த்து உடனே படம் செய்யலாம் என ஒப்புக்கொண்டார். இப்படம் மிக சிக்கலான சைக்கலாஜிக்கல் திரில்லர். படம் ஒரு புது அனுபவமாக இருக்கும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்