“இயக்குநர் ஆதிக் மேலே ஒரே ஒரு வருத்தம் உண்டு. பிரபுதேவாவுடன் அவர் என்னை நடனம் ஆடும்படியான வாய்ப்பு அமைத்துத் தரவில்லை” என நடிகை காயத்ரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “90’ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே மிகவும் பிடித்தவர் பிரபுதேவா. அவருடன் நடித்தது என் கனவு நிறைவேறிய தருணம்தான். இதுவரை நான் வழக்கமாக நடித்து வந்த படங்களின் பாணியில் இருந்து முற்றிலும் வேறான ஒரு கதைக்களத்தில் ‘பஹிரா’ படத்தில் பணிபுரிந்திருக்கிறேன். ஆதிக் இந்த கதையை சொன்னபோதே வித்தியாசமாக இருந்தது. பிரபுதேவா மாஸ்டரை இதுவரை பல படங்களில் நிறையப் பேசும் கலகலப்பான மனிதராக பார்த்திருக்கிறோம். ஆனால், நேரில் மிகவும் அமைதியானவர்; பக்குவப்பட்டவர்.
அவருடைய நிறையப் படங்களைச் சொல்லி, நான் அவரது ரசிகை என்று சொன்னபோது கூட அதிகம் எதுவும் சொல்லாமல், சிரித்துக் கொண்டே நன்றி என்று சொன்னார். இயக்குநர் ஆதிக் மேலே ஒரே ஒரு வருத்தம் உண்டு. பிரபுதேவாவுடன் அவர் என்னை நடனம் ஆடும்படியான வாய்ப்பு அமைத்துத் தரவில்லை என்பதுதான் அது. எதிர்காலத்தில் மீண்டும் மாஸ்டருடன் பணிபுரியும் போது அந்த வாய்ப்பு அமையும் என நம்புகிறேன்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
43 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago