“20 வருட திரை வாழ்க்கையில் நிறைய கிடைத்துள்ளது” - ஜெயம் ரவி நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

“மேக்கிங் பொறுத்தவரை அகிலன் மிகவும் கடினமான படம். என்னுடைய 20 வருட திரை வாழ்க்கையில் நிறைய பாராட்டு கிடைத்திருக்கிறது” என ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அகிலன்’. ப்ரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள இப்படம் மார்ச் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய இசையமைப்பாளர் சாம் சி.எஸ், “ஒரு படத்திற்கு கதைக்களம் மிக முக்கியம். கதை நடக்கும் இடம் படத்தின் தன்மையை மாற்றும். இந்தப் படத்தில் ஹார்பரில் நாம் பார்க்காத ஒரு வாழ்கையை, ஒரு புதிய உலகத்தை காட்டியுள்ளார்கள். கல்யாண் மிகப்பெரிய ஆராய்ச்சி செய்துள்ளார். பாடல்கள் பற்றி விவரிக்கும் போது கூட இந்த ராகத்தில் போடலாம் என்பார். எனக்கு ராகம், இசை எல்லாம் தெரியாது இப்போது தான் கற்றுக்கொள்கிறேன். ஆனால் இசையை எனக்கு பிடித்த வேலையாக விரும்பி செய்கிறேன். படம் நன்றாக வந்துள்ளது” என்றார்.

நடிகர் ஜெயம் ரவி பேசுகையில், “20 வருட திரை வாழ்க்கையில் உங்களது ஒத்துழைப்பு, பாரட்டு நிறைய கிடைத்துள்ளது. மேக்கிங் பொறுத்தவரை அகிலன் மிகவும் கஷ்டமான படம். இதெல்லாம் கிடைக்குமா, இதெல்லாம் எடுக்க முடியுமா, என நினைத்தபோது தயாரிப்பாளரால் தான் இதை எடுக்க முடிந்தது. இந்தப் படத்தை சாத்தியமாக்கிய என் படக்குழு அனைவருக்கும் நன்றி. பாபி மாஸ்டர் பேராண்மையிலிருந்து தெரியும். இயக்குநருடன் இணைந்து பயணித்துள்ளார். விவேக், பிசி ஶ்ரீராமின் செல்லப்பிள்ளை. அயராத உழைப்பாளி, என் அடுத்த படத்திலும் அவர் தான் ஒளிப்பதிவு செய்கிறார்.

பிரியாபவானி சங்கர் தமிழ் பேசி நடிக்கும் ஹீரோயின். ஒவ்வொரு படத்திலும் மெருகேறிக்கொண்டே போகிறார், வாழ்த்துகள். இயக்குநர் கல்யாண், மிகப்பெரிய திறமைசாலி, கடின உழைப்பாளி, நல்ல சிந்தனையாளர். மக்களுக்கு நல்ல விஷயம் சொல்ல ஆசைப்படும் நபர். அவருக்கு பெரிய வெற்றிகள் கிடைக்கட்டும். இந்தப் படம் நன்றாக உருவானத்தற்கு காரணம் அவருடைய டீம் தான். தான்யா இந்தப் படத்தில் சர்ப்ரைஸ் ஆக இருப்பார். சாம்.சி.எஸ் அட்டகாசமான இசையை தந்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். பார்த்து ஆதரவு தாருங்கள், நன்றி” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்