'வணங்கான்’ படத்தை மீண்டும் தொடங்கும் பாலா

By செய்திப்பிரிவு

இயக்குநர் பாலா, சூர்யா நடிப்பில் 'வணங்கான்’ படத்தை இயக்கினார். ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், திடீரென படம் கைவிடப்பட்டது. பின்னர், இந்தப் படத்தில் இருந்து சூர்யா விலகினார். இதுபற்றி பாலா வெளியிட்ட அறிக்கையில், “ 'வணங்கான்' திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு வருத்தம்தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு வரும் 9ம் தேதி கன்னியாகுமரி அருகே நடக்க இருக்கிறது. இந்தப் படத்துக்கு முதலில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக ஒப்பந்தமாகி இருந்தார். இப்போது வேறு ஹீரோயினை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE