கடினமான படப்பிடிப்புக்கு ஒத்துழைத்த விக்ரமுக்கு நன்றி என்று கவுதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
'துருவ நட்சத்திரம்' படத்தின் பிரதான காட்சிகள் படப்பிடிப்பு துருக்கி, இஸ்தான்புல் உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்று வருகிறது. விக்ரம், சிம்ரன், ராதிகா உள்ளிட்ட பலர் இப்படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
இப்படப்பிடிப்பு குறித்து, "விரைவில் துருவின் உலகுக்கு உங்களை அழைத்துச் செல்வேன் என நம்புகிறேன். அல்லது ஜானின் உலகத்துக்கு. அல்லது யோஹானின் உலகத்துக்கு. கடினமான படப்பிடிப்புக்கு ஒத்துழைத்த விக்ரமுக்கு நன்றி.
அற்புதமான நடிகர் நடித்துக் கொண்டிருக்கும்போது நிழலில் நின்று இளைப்பாறுவதே சில சமயங்களில் சிறந்தது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் கவுதம் மேனன்.
துருக்கி படப்பிடிப்போடு விக்ரமின் ஒட்டுமொத்த காட்சிகளும் முடிந்துவிடுவதால், அதனைத் தொடர்ந்து 'சாமி 2'வில் கவனம் செலுத்தவுள்ளார். இதில் த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago