சென்னை: நடிகர்கள் சிலம்பரசன் மற்றும் கௌதம் கார்த்திக் நடித்துள்ள ‘பத்து தல’ படத்தின் டீசர் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 05:31 மணி அளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கடந்த மாதம் இந்தப் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி இருந்தது. வரும் 30-ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது.
சிலம்பரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டீஜய் அருணாசலம், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஸ்டூடியோ கிரீன் மற்றும் பென் ஸ்டூடியோஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
சிலம்பரசன், ஏஜிஆர் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘புயலுக்கு முன் அமைதி. ஏஜிஆர் உலகை பார்க்க’ என ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் டீசர் அறிவிப்புக்கு கேப்ஷன் கொடுத்து ட்வீட் செய்துள்ளது.
» கோவையில் யானைகள் தாக்கியதில் ஒரே நாளில் இருவர் உயிரிழப்பு
» திராவிட மாடல் ஆட்சிக்கு ஈரோடு கிழக்கு மக்கள் அங்கீகாரம்: ஜவாஹிருல்லா
முக்கிய செய்திகள்
சினிமா
38 mins ago
சினிமா
49 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago