“இந்த ஆண்டு உங்களுக்கு நிறையை இசையைக் கொடுப்பேன் என உறுதியக்கிறேன்” என்று திரையுலகில் 26 ஆண்டுகள் கடந்ததையொட்டி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
கடந்த 1997-ம் ஆண்டு ‘அரவிந்தன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. சரத்குமார், பார்த்திபன் நடித்த இப்படம் யுவன் சங்கர் ராஜாவின் இசைக்கு தொடக்கமாக அமைந்தது. தொடர்ந்து ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘தீனா’, ‘மனதை திருடிவிட்டாய்’, ‘நந்தா’, ‘துள்ளுவதோ இளமை’ என அடுத்தடுத்த படங்கள் மூலமாக தனி கவனம் பெற்றார் யுவன்.
அண்மையில் அவரது இசையில், ‘லவ் டுடே’, ‘லத்தி’ படங்கள் வெளியாகி பாடல்கள் ஹிட்டித்தன. தொடர்ந்து ‘ஏழு கடல், ஏழு மலை’, ‘இறைவன் மிகப்பெரியவன்’, ‘இறைவன்’, ‘கஸ்டடி’ உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா திரைத்துறையில் அடியெடுத்து வைத்து 26 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் யுவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மெசேஜ்கள், வீடியோ எடிட்கள், கோலாஜ் என என்னை வாழ்த்தி பதிவிட்ட உங்களின் எல்லையில்லா அன்புக்கு நன்றிகள். உங்களது இந்த அன்புக்கு மரியாதையுள்ளவனாக இந்த வருடத்தில் நிறைய இசையை நிச்சயம் கொடுப்பேன் என உறுதியளிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
» ‘இந்தியன் 2’ படத்துக்காக காஜலுக்கு 3.5 மணி நேரம் மேக்கப்
» திரைப்படங்களை ஒப்பிட வேண்டாம் - ரகுல் ப்ரீத் சிங் வேண்டுகோள்
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago