விஜய்சேதுபதி உடன் பணிபுரியும் ஆஸ்கர் விருது வெற்றியாளர்

By ஸ்கிரீனன்

பாலாஜி தரணிதரனின் 'சீதக்காதி' படத்துக்காக விஜய்சேதுபதி ஒப்பனை கலைஞராக க்ரேக் கேனானுன் பணிபுரியவுள்ளார்

'சூப்பர் டீலக்ஸ்' படத்தைத் தொடர்ந்து பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகும் 'சீதக்காதி' படத்தில் பணிபுரியவுள்ளார் விஜய் சேதுபதி. இதில் 75 வயதுடைய மேடை நடிகராக நடிக்கவுள்ளார்.

இந்த கதாபாத்திரத்துக்காக 3 முறை ஆஸ்கர் விருது வென்ற க்ரேக் கேனானுனை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இவர் 'Mrs. Doubtfire', 'The Curious Case of Benjamin Button' மற்றும் 'Dracula' ஆகிய படங்களுக்காக ஆஸ்கர் விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் விஜய் சேதுபதியின் 75 வயது கதாபாத்திரத்தை இப்படியிருந்தால் நன்றாக இருக்கும் என வரைந்து கொடுத்துள்ளார் விஸ்வநாத் சுந்தரம். இவர் 'பாகுபலி' இரண்டு பாகங்களுக்காக ராஜமவுலியுடன் இணைந்து பணிபுரிந்திருப்பது நினைவுக் கூறத்தக்கது.

விரைவில் 'சீதக்காதி' படத்துக்காக க்ரேக் கேனானுன் சென்னைக்கு வந்து விஜய் சேதுபதியின் லுக்கை இறுதி செய்யவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

மேலும்