விஜய் சேதுபதி - கவுதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஆறுமுககுமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவாளராகவும், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிபுரிந்தார்கள்.
'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்' படத்தில் ஆதிவாசியாக விஜய் சேதுபதி நடித்துள்ளதாக படக்குழு அறிவித்தது. முழுக்க காமெடி காமெடி கலந்த ஆக்ஷன் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. கதை அனைவருக்குமே தெரிந்தது என்றாலும், கதை நடக்கும் களம் மிகவும் புதுமையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்கள். அடர்ந்த காடுகளுக்குள்ளும் சில முக்கிய காட்சிகளை படமாக்கியுள்ளது படக்குழு.
தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதியின் வித்தியாசமான கதாபாத்திர வடிவமைப்பால், சமூகவலைதளத்தில் பலரும் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago