‘துருவ நட்சத்திரம்’ பின்னணி இசைப் பணி தொடங்கியது: ஹாரிஸ் ஜெயராஜ் தகவல் 

By செய்திப்பிரிவு

கௌதம் வாசுதேவ் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் பின்னணி இசைக்கான பணிகளைத் தொடங்கியுள்ளேன் என இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.

விக்ரமை வைத்து இயக்குநர் கௌதம் வாசு தேவ் மேனன் இயக்கும் படம் ‘துருவ நட்சத்திரம்’. ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா நடித்துள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படத்தின் டீசர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஒரு மனம் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. ஆனால், படத்தின் அடுத்த அப்டேட் குறித்து தெரியாமல் இருந்தது.

இந்நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் பணிகள் முடிவுபெறும் சூழலில் இருப்பதாகவும், படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கெளதம் வாசுதேவ் மேனன் தெரிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக ‘துருவ நட்சத்திரம்’ படத்திற்கான பின்னணி இசைப் பணிகளை தொடங்கியுள்ளதாக ஹாரிஸ் ஜெயராஜ் இன்று ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து, ஹாரிஸ் வெளியிட்ட பதிவில், “கெளதம் வாசுதேவின் துருவ நட்சத்திரம் படத்திற்கான பின்னணி இசைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. டால்பி 9.1.4 தரத்தில் விரைவில் திரையரங்கில் சந்திக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார். மீண்டும் கௌதம் வாசுதேவ் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் காம்போவில் உருவாகும் படத்தின் இசையை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

மேலும்