“முத்தழகு என்ன பாவம் பண்ணுச்சு..?” - பருத்திவீரன் @ 16 ஆண்டு | நெட்டிசன் நோட்ஸ்

By செய்திப்பிரிவு

அமீர் இயக்கத்தில் கார்த்தி அறிமுக நாயகனாகவும், பிரியாமணி நாயகியாக நடித்து, தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ‘பருத்திவீரன்’ படம் வெளியாகி 16 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இதில் யுவன் சங்கர் ராஜாவின் இசையும், ராம்ஜியின் ஒளிப்பதிவும் பருத்தீவீரனை காலத்தால் அழியாத திரைப்படமாக மாற்றியுள்ளது. பருத்திவீரன் வெளியாகி 16 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ரசிகர்கள் பலரும் பருத்திவீரன் படத்தை இணையத்தில் நினைவுகூர்ந்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பை இந்தப் பதிவில் காணலாம்.

amar: பருத்திவீரன் - கார்த்தி. இந்திய சினிமா'ல இப்படி ஒரு அறிமுக படம் யாருக்கும் அமையாது. கடைசியா தமிழ் சினிமாவுல ஒரு படம் மாவட்டத்துல போட்ட எல்லா தியேட்டர்லயும் 100 நாள் ஓடுனதுன்னா அது பருத்திவீரன்தான். யுவன் சங்கர் ராஜா சம்பவம்.

KarthicK Nellai: கார்த்தியோட நல்ல படங்களை ஒன்னோடு ஒன்னு ஒப்பீடு பண்ணலாம். ஆனா பருத்திவீரன் வேற ரகம். இன்னும் 100 படம் பண்ணாலும் பருத்திவீரன் தனியா தெரியும்.

taa_mil: அறிமுக நாயகனுக்கு சிறந்த படம்.

ச.கருணாநிதி: ராம் & பருத்திவீரன்... இதுபோல மதுரை, கொடைக்கானல் பேஸ்ல தமிழ் சினிமாவுக்கு அமீர் நிறைய அற்புதங்களை அளிப்பார்னு அந்த டைம்ல நினைச்சேன். அதுக்கு பிறகு அவர் நடிக்கறதுக்கு போய்ட்டதால அந்த இடம் வெற்றிடமாகிருச்சு. அமீர் மறுபடியும் மதுரை சார்ந்த கதைகளை இயக்கணும்.

மதுரை சண்டியர்: முதல் படத்திலேயே திரை உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த படம் #பருத்திவீரன் மதுரை ஜெயம் தியேட்டர் & செல்லூர் சரஸ்வதி தியேட்டரிலும் 1 வருடங்களுக்கு மேலாக ஓடிய படம். கார்த்தி அண்ணாக்கு முதல் படம் மாதிரியே தெரியாது. அவ்வளவு யதார்த்தமா நடித்திருப்பார்.

birdseye: அறிமுக படமே சிறப்பா அமைஞ்சது கார்த்திக்கு தான்னு நினைக்குறேன். படமும் சிறப்பு, நடிப்பு அதை விட சிறப்பு.

தமிழ்நாடு ஷேக்: காலத்துக்கும் நின்னு பேசும் பருத்திவீரன்.

ரெமோ: க்ளைமாக்ஸ் பாக்க மனசே வரமாட்குதுன்றது இந்தப் படம்தான் பருத்திவீரன்.

குணா யோகச்செல்வன்: விருமாண்டி பருத்திவீரன், சுப்ரமணியபுரம், ஆரண்ய காண்டம், ஆடுகளம், வட சென்னை, ஓரம் போ, காகபோ, மாயண்டி குடும்பத்தார்னு நிறைய இருக்கே.. Repeat watching எண்ணிக்கை அடிப்படைல போட்ருக்கேன்.

Name: ராம் பருத்திவீரன் சிறந்த படைப்பு. 15 வருஷத்துக்கு மேல ஆகுது. இன்றைய வெற்றிமாறன்,ரஞ்சித் அரசியல் பேசினாலும் அடிப்படை சினிமாவை கைவிடவில்லை. அமீர் அரசியல் பேசி சினிமாவை நழவவிட்டுவிட்டார். மீண்டும் அவர் இயக்க வேண்டும்.

SANJAY: பருத்திவீரன் படத்துல சூரியாவோட தம்பினு அறிமுகம் ஆனாரு. கொஞ்சம் வருஷத்துல கார்த்தியோட அண்ணன்தான் சூர்யான்னு தெரிய வச்சார்.

Abi: படத்தின் இறுதிக்காட்சி நீண்ட நாட்கள் தொந்தரவு செய்தது.

Jeeva: Climax பார்த்து பயந்து தூங்காம இருந்தது ஞாபகம் வருது. இதே வார்த்தைதான் மனசில வந்துச்சு... முத்தழகு என்ன பாவம் பண்ணுச்சு. வாழணும்னுதான ஆசப்பட்டுச்சுன்னு.

Joy boy: கார்த்தி, யுவன், அமீர் மூனு பேருக்கும் நேனஷல் அவார்டு குடுத்திருக்கணும். விசாரணைக்கூட ரீவாட்ச் போட்டு 10-20 தடவையாது பாத்துருப்பேன். இந்தப் படத்தோட க்ளைமாக்ஸ் ஒரே தடவைதான் பாத்துருக்கேன். அதுக்கப்புறம் பாக்க மனசே வந்ததில்ல.

M-R: கார்த்தி debut-க்கு அப்புறம் எத்தனை actors வந்தாச்சு. கார்த்தியே மெட்ராஸ், ஆஒ, தீரன், கைதினு Trendsetter films பையா, நான் மகான் அல்ல, தோழா, பொன்னியின் செல்வன்னு extra oridinary characters பண்ணாலும் இன்னிக்கு வரைக்கும் பருத்திவீரனை அடிச்சுக்க முடிய மாட்டிங்குது. Cult classic.

டென்டிஸ்ட் பட்டாம்பூச்சி: வாழணும்னு ஆசைப்பட்டு வந்தவன இப்படி வாசலோட அனுப்பிட்டீங்களேடா. என்ன காணாப்பொணமா ஆக்கிடுடா... சிறந்த வசனங்கள்.

Vignesh Vicky: இந்தப் படம் ஒரு மேஜிக். எதிர்காலத்தில் இம்மாதிரி படம் வருமா என்று தெரியவில்லை..!

Sangeetha Velmurugan: ஒரு அறிமுக கதாநாயகனுக்கு இந்தளவுக்கு பவர்ஃபுல்லான ஒரு இன்ட்ரோ சீன்... அதுல அப்டியே இயக்குநர் பெயர் வர்றது மாதிரி ஒரு எடிட்னு ஒரு perfect capture இதுவரை வேறெந்த படத்திலும் பார்த்ததா எனக்கு ஞாபகம் இல்ல. தரமான இசை, இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், நடிப்புனு பல பிளஸ்கள் இருக்குற படம் இது. கார்த்தியோட கரியர் பெஸ்ட்னா அது கண்டிப்பா "பருத்தி வீரன்" தான்..!! அதே மாதிரி It's a feather in Director Ameer's Cap!!

23 பிப்ரவரி 2007 ரிலீஸாகி, 16 வருஷங்கள் கடந்தும், இப்போ இன்னிக்கு தேதிக்கு பார்த்தாலும் கூட ஒரு திருவிழா கொண்டாட்ட மனநிலைய பார்வையாளர்களுக்குக் குடுக்க இந்தப் படம் தவறினதே இல்ல. Such a #marvellousfeat.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்