மோகன்.ஜி-யின் ‘பகாசூரன்’, தனுஷின் ‘வாத்தி’ பட வசூல் நிலவரங்கள் என்ன என்பது குறித்து பார்ப்போம். இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘பகாசூரன்’. சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தில், ராதாரவி, கே.ராஜன், தேவதர்ஷினி, கூல் சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். டேட்டிங் செயலிகளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பேசும் இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப்பெற்று வருகிறது.
ரூ.5 கோடி முதல் ரூ.8 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பகாசுரன் படம் வெளியாகி 6 நாட்கள் கடந்த நிலையில், ரூ.5 கோடிக்குள் வசூலை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. 250-க்கும் மேற்பட்ட திரைகளில் படம் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘வாத்தி’. தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியான இந்தப் படத்தில் பாலமுருகன் எனும் கதாபாத்திரத்தில் ஆசிரியராக தனுஷ் நடித்துள்ளார். சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய் குமார், ஆடுகளம் நரேன் இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
வாத்தி வெளியான முதல் மூன்று நாட்களில் மொத்தமாக ரூ.51 கோடி வரை உலக அளவில் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 6 நாட்களில் ரூ.64 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago