தனுஷ் வெர்ஷன் ‘வா வாத்தி’ பாடல் வீடியோ ரிலீஸ் - எப்படி இருக்கு?

By செய்திப்பிரிவு

தனுஷ் குரலில் ‘வா வாத்தி’ பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது. மேலும், தனுஷ் பாடும் இந்தப் பாடலின் வரிகளில் சின்னஞ் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘வாத்தி’. தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியான இந்தப் படத்தில் பாலமுருகன் எனும் கதாபாத்திரத்தில் ஆசிரியராக தனுஷ் நடித்துள்ளார். சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய் குமார், ஆடுகளம் நரேன் இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் வெளியான முதல் மூன்று நாட்களில் மொத்தமாக ரூ.51 கோடி வரை உலக அளவில் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஸ்வேதா மோகன் குரலில் தனுஷ் வரிகளில் வெளியான இப்படத்தின் ‘வா வாத்தி’ பாடல் ரசிகர்களின் அபிமான பாடல்களில் ஒன்றாக மாறியது. இதுவரை இந்த வீடியோ 45 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதனிடையே, தனுஷ் குரலிலும் இந்தப் பாடல் பதிவு செய்யப்பட்டிருந்தது. தனுஷ் குரலில் பாடும் ‘வா வாத்தி’ பாடல் வீடியோவை வெளியிட ரசிகர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில், தற்போது அந்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் பாடல் வரிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பாடல் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE