சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘தங்கலான்’ படத்தில் பிரிட்டிஷ் நடிகர் டான் கால்டஜிரோனா (Dan Caltagirone) இணைந்துள்ளார். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தங்கலான் படத்தை ஸ்டூடியோ கிரீன்ஸ் மற்றும் நீலம் படத் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. உண்மைச் சம்பவத்தை தழுவி இந்தப் படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. பசுபதி, மாளவிகா மோகனன் உட்பட பலர் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். படத்தின் மையக்கரு இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் அமைந்துள்ளதை போல உள்ளது.
கோலார் தங்க வயல் குறித்த கதை என பா.ரஞ்சித் தெரிவித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா மாநிலம் கடப்பா மற்றும் கர்நாடகாவில் நடந்து வருவதாக தகவல். படம் பான் இந்தியா பாணியில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
இந்தச் சூழலில்தான் பிரிட்டிஷ் நடிகர் டான் கால்டஜிரோனா இப்படத்தில் இணைந்துள்ளார். 50 வயதான அவர் இதுவரை 16 படங்களில் நடித்துள்ளார். தி பீச், தி பியானிஸ்ட் போன்ற படங்களில் அவர் நடித்துள்ளார்.
» ‘ஜியோ சினிமா’வில் 4K ரெசல்யூஷனில் நேரலையில் ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்க்கலாம்!
» இந்தியா - சிங்கப்பூர் இடையே நேரடி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை தொடக்கம்
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago