சிவாவின் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ பட ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் சிவா நடிப்பில் உருவாகியுள்ள 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இதனை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார். ‘கோலிவுட் சினிமாவுக்கு ஒரு ப்ரெஷ்ஷான ரொமான்டிக் காமெடி கதை இது’ என அவரது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் சிவா, அஞ்சு குரியன், மேகா ஆகாஷ் மற்றும் பின்னணி பாடகர் மனோ ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்மார்ட்போன் ஊடாக ஒரு பாட் உடன் ஏற்படும் காதல்தான் கதையின் கரு என தெரிகிறது.

இந்தப் படத்தை லார்க் ஸ்டூடியோஸ் பேனரில் கே.குமார் தயாரித்துள்ளார். விக்னேஷ் ஷா இயக்கியுள்ளார். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். ஆர்தர் ஏ.வில்சன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். படம் வரும் 24-ம் தேதி வெளியாக உள்ளது.

சுமார் 2.02 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது இந்த ட்ரெய்லர். ‘கேர்ள் பிரெண்ட் இருக்குறவங்க போன்ல லவ் பண்றாங்க. இல்லாதவங்க போனையே லவ் பண்ணலாம்’ என ஆரம்பமாகிறது படத்தின் ட்ரெய்லர். இடையிடையே காமிக்ஸ் சூப்பர் ஹீரோக்களும் இந்த ட்ரெய்லரில் இடையிடையே எட்டிப் பார்க்கிறார்கள்.படத்தின் ட்ரெய்லர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்