ஆத்யக் புரடக்சன்ஸ் சார்பில் கவுதம் சொக்கலிங்கம் தயாரிக்கும் படம், 'கெவி'. தமிழ் தயாளன் இயக்குகிறார். அறிமுக நடிகர் ஆதவன் நாயகனாக நடிக்கிறார். ஷீலா ராஜ்குமார், ஜாக்குலின் உட்பட பலர் நடிக்கின்றனர்.
ராசி தங்கதுரை வசனம் எழுதும் இந்தப் படத்துக்கு ஜெகன் ஜெயசூர்யா ஒளிப்பதிவு செய்கிறார். பாலசுப்பிரமணியன் இசையமைக்கிறார்.
படம்பற்றி இயக்குநர் தமிழ் தயாளன் கூறியதாவது: ‘கெவி’ என்றால் அடிவாரம் அல்லது பள்ளம் என்று பொருள். மலை எப்போதுமே பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அதன் இன்னொரு இருட்டுப் பக்கம் யாருக்கும் தெரியாது. இத்தனை ஆண்டு காலத் தமிழக வரலாற்றில் எத்தனையோ ஆட்சிகள் மாறினாலும் மலைக்கிராம மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் இன்னும் கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட ஒரு மலைக்கிராமத்தின் கதையை யதார்த்தமாகப் படமாக்கி வருகிறோம். இதற்காக 3 வருடங்களாக இந்த மலைக்கிராம மக்களுடன் வாழ்ந்து இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறேன். இப்போது கொடைக்கானல் அருகே படப்பிடிப்பு நடந்து வருகிறது. இவ்வாறு கூறினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago