“சமூக அக்கறை கொண்ட ‘பகாசூரன்’ படம் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்” என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவான ‘பகாசூரன்’ படம் நேற்று (பிப்.17) திரையரங்குகளில் வெளியானது. சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கும் இப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் ‘பகாசூரன்’ சமூக அக்கறை கொண்ட படம் என குறிப்பிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் படக்குழுவையும் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வூட்டும் ‘பகாசூரன்’ திரைப்படத்தின் இயக்குநர் மோகன்.ஜி, நடிகர் செல்வராகவன் மற்றும் படக்குழுவினருக்கு எனக்கு வாழ்த்துகள். சமூக அக்கறை கொண்ட '#பகாசூரன்' அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்” என பதிவிட்டுள்ளார்.
படத்தின் விமர்சனத்தை வாசிக்க: பகாசூரன் Review: ஆக்கமும் தாக்கமும் எப்படி?
» பகாசூரன் Review: ஆக்கமும் தாக்கமும் எப்படி?
» ‘சினிமா, சீரிஸின் ஆபாசங்கள்தான் இளைஞர்களை சீரழிக்கின்றன” - பாபா ராம்தேவ்
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago