தமிழில் அதிகம் நடிக்காதது ஏன்? - ஸ்ரேயா விளக்கம்

By செய்திப்பிரிவு

உபேந்திரா, கிச்சா சுதீப், ஸ்ரேயா உட்பட பலர் நடித்துள்ள படம், ‘கப்ஜா’. கே.சந்துரு இயக்கியுள்ளார். கன்னடத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா முறையில் வெளியாக இருக்கிறது. 70-களில் நடக்கும் கேங்ஸ்டர் படமான இது மார்ச் மாதம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரேயா படம் பற்றி கூறியதாவது:

இந்தப் படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை. பான் இந்தியா இப்போது சரியான பதமாக இருக்கிறது. தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு உட்பட மொழி எதுவாக இருந்தாலும் பிரச்சினையில்லை. கதைதான் முக்கியம். ஒரு நடிகை திருமணம் முடித்தவரா, முடிக்காதவரா, குழந்தை இருக்கிறதா என்பதும் விஷயமே இல்லை. தமிழில் ஏன் அதிகம் நடிக்கவில்லை என்று கேட்கிறார்கள்.

தமிழ் சினிமா எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது. எனக்கு நடிக்கப் பிடிக்கும். நானும் நடிக்க விரும்புகிறேன். நான் தயாராக இருக்கிறேன். எனக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு ஸ்ரேயா கூறினார். இயக்குநர் சந்துரு கூறும்போது, “கப்ஜா என்றால் கைப்பற்றுவது. இந்தப் படம் இரண்டு பகுதிகளாக உருவாகி இருக்கிறது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்