நடிகர் யோகிபாபுவுக்கு கிரிக்கெட் பேட்டை பரிசளித்த எம்.எஸ்.தோனி 

By செய்திப்பிரிவு

நகைச்சுவை நடிகராகவும், நாயகனாகவும் வலம் வரும் நடிகர் யோகிபாபுவுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசளித்துள்ளார். இந்தப் புகைப்படத்தை யோகிபாபு தனது சமூகவலைதளப் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

அந்தப் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள யோகிபாபு, "எம்.எஸ்.தோனி கைகளில் இருந்தும் அவர் விளையாடிய நெட்டில் இருந்தும் நேரடியாக இந்த பேட் எனக்கு கிடைத்துள்ளது. இந்த பேட்டை எனக்குக் கொடுத்ததற்கு நன்றி தோனி சார். உங்கள் கிரிக்கெட் நினைவுகளைப் போல சினிமாவில் நீங்கள் கால்பதித்திருக்கும் இந்த நினைவுகளையும் எப்போதும் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்வேன்" என்று பதிவிட்டுள்ளார். சாக்‌ஷி தோனியையும் டேக் செய்து இந்தப் பதிவை யோகிபாபு பகிர்ந்திருக்கிறார்.

ஹரிஷ் கல்யாண், இவானா நடிப்பில் ‘லெட்ஸ் கெட் மேரீட்’ என்ற திரைப்படத்தின் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் களம் இறங்குகிறார். நதியா, யோகிபாபு இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஷ்வஜித் படத்திற்கு இசையமைக்கிறார். தோனி புரொடக்‌ஷன் சார்பில் தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜை மற்றும் படத்தின் தலைப்பு குறித்தான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சினிமா

54 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்