நடிகர் அஜித் வெளிநாட்டுப் பயணம் முடித்து தற்போது சென்னை திரும்பியுள்ள நிலையில், ‘ஏகே 62’ அப்டேட் விரைவில் வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித், மஞ்சு வாரியர் உட்பட பலரும் நடித்திருந்த ‘துணிவு’ படம் கடந்த பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியானது. தற்போது படம் ஓடிடி நெட்ஃபிளிக்ஸ் தளத்திலும் வெளியாகி உலக அளவில் 5 இடங்களுக்குள் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.
‘துணிவு’ படம் வெளியானதும் நடிகர் அஜித் தன் குடும்பத்துடன் ஸ்காட்லாந்து சென்றிருந்தார். தற்போது அஜித் ஸ்காட்லாந்தில் இருந்து சென்னைக்குத் திரும்பியுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சென்னை விமானநிலையத்தில் நடிகர் அஜித்துடன் ரசிகர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அஜித் சென்னை திரும்பி இருப்பதால், அவர் தனது அடுத்தப் படமான ‘ஏகே 62’ படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
» CCL 2023 | பிப்.18-ல் திரை நட்சத்திர கிரிக்கெட் தொடக்கம் - எந்த அணிக்கு யார் கேப்டன்?
» ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ பட புகழ் பசில் ஜோசப்புக்கு பெண் குழந்தை
முன்னதாக, விக்னேஷ்சிவன் இயக்குவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் கதையை தயாரிப்பு நிறுவனமான லைகா விரும்பாததால், அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி இயக்குவார் எனவும் சொல்லப்படுகிறது. மேலும், அஜித் முழுமையாக விக்னேஷ் சிவனை முழுமையாக புறக்கணிக்கவில்லை எனவும் அவர் ‘ஏகே 63’ படத்தை இயக்குவார் எனவும் கூறப்படுகிறது. விரைவில் ‘ஏகே 62’ அறிவிப்பு வெளியாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
22 mins ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago