செல்வராகவன், நட்டி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘பகாசூரன்’. சாம். சி.எஸ் இசை அமைத்துள்ளார். ‘திரவுபதி', ‘ருத்ரதாண்டவம்' படங்களை இயக்கிய மோகன் ஜி இதை இயக்கியுள்ளார். வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் இந்தப் படம் பற்றி மோகன்.ஜி கூறியதாவது:
பகாசூரன் யார், எப்படிப்பட்டவன் என்பது படம் பார்க்கும்போது தெரியும். இது எந்த சமூகத்துக்கும் எதிரான படம் இல்லை. எல்லா தரப்பினருக்குமான படம். பா.ரஞ்சித் பட்டியலின மக்களுக்கும் நான் ஓபிசி தரப்பினருக்கும் படம் எடுப்பதாகச் சொல்கிறார்கள். அதில் உண்மையில்லை.
பா.ரஞ்சித் என் பேஸ்புக் நண்பர். சினிமாவில் நான் யாரையும் எதிரியாக பார்க்கவில்லை. சில செய்திகளின் அடிப்படையில் கள ஆய்வு மேற்கொண்டு இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன்.
சினிமாவில் சமநிலை வேண்டும். இயக்குநர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. சமூகத்துக்குத் தேவையான படங்களைத் தொடர்ந்து எடுப்பேன்” என்றார். செல்வராகவன் பேசும்போது, “இங்கு திறமை இல்லாத யாரும் சாதாரணமாக ஜெயித்து விடமுடியாது. மோகன் ஜி கடுமையான உழைப்பாளி” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago