மீண்டும் படம் இயக்குகிறார் வேலு பிரபாகரன்

By செய்திப்பிரிவு

பிரபுவின் ‘நாளைய மனிதன்’, அருண்பாண்டியன் நடித்த ‘அசுரன்’, ‘கடவுள்’, சத்யராஜின் ‘புரட்சிக்காரன்’ உட்பட பல படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன்.

கடைசியாக, ‘ஒரு இயக்குநரின் காதல் டைரி’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கும் படத்துக்கு ‘நானும் சினிமாவும் 40 பெண்களும்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இளையராஜா இசை அமைக்கும் இந்தப் படத்தை ராஜன் செல்லையா தயாரிக்கிறார்.

படம்பற்றி வேலு பிரபாகரன் கூறும்போது, “நம் ஊரில் காதல் என்பது சினிமா சார்ந்தே கட்டமைக்கப்படுகிறது. அதில் காட்டப்படும் பாடல்கள், பெண் மீதான வர்ணனை, இப்படி எல்லாமே அதைப் பின்பற்றிதான் இருக்கிறது. ஆனால், நிஜக் காதல் அப்படியில்லை. உண்மையான காதல் எப்படியிருக்கும் என்பதை இந்தப் படம் பேசும். சிறுவயதில் இருந்து ஒவ்வொரு கட்டத்திலும் ஒருவனுக்கு ஏற்படும் காதல் அனுபவங்கள்தான் இந்தப் படம். நான் ஒரு கேரக்டரில் நடிக்கிறேன். நிறைய புதுமுகங்கள் நடிக்கிறார்கள்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்