விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தில், அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அபிராமி வெங்கடாசலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் ‘லியோ’. லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தில் புதியதாக அபிராமி வெங்கடாசலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கெனவே அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
» “எந்த சமூகத்தையும் எதிர்க்க நான் சினிமாவுக்கு வரவில்லை” - இயக்குநர் மோகன்.ஜி
» ‘‘உங்கள் ஊக்கம்தான் எங்களுக்கு பலம்” - பிரதமர் மோடி குறித்து ரிஷப் ஷெட்டி உற்சாகம்
இதனை உணர்த்தும் விதமாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இருக்கும் புகைப்படத்தினைப் பகிர்ந்து, “வருங்காலம் என்பது இன்று நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதனால் உருவாகுவது. அதை இவர் சரியாக செய்து கொண்டு வருகிறார்” என பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago