குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வு பாடல் ஒன்றை இயக்கியுள்ளார் கிருத்திகா உதயநிதி. இந்தப்பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘யார் இந்த பேய்கள்’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இசைஞானி இளையராஜா இசையமைப்பில், பா விஜய்யின் பாடல் வரிகளில் இந்த மியூசிக் வீடியோ பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்பாடலை இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார், சக்தி வெங்கராஜ் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
“யார் இந்த பேய்கள்” பாடல் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இடையே பயனுள்ள தகவல் தொடர்பு தேவை என்பதை வலியுறுத்துகிறது. சமூகத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான ஒரு குழந்தையிடம் பெற்றோர் மனம் விட்டு பேசவும், ஆதரிக்கவும் தவறினால், அது தரும் மனச்சோர்வு குழந்தையை கடுமையாக துன்புறுத்தும்.
வன்முறைக்கு ஆளான குழந்தைகளின் கஷ்டங்களும் வேதனைகளையும் அடிப்படையாக கொண்டு இந்த விழிப்புணர்வு மியூசிக் வீடியோ வெளிவந்துள்ளது. குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிராக போராட மக்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டே இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழந்தைகளின் துயரங்கள் தீர்க்கப்படாவிட்டால், அவர்கள் மீண்டும் மீண்டும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவார்கள். இதனால் அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள். ஒரு குழந்தையின் அப்பாவித்தனம் பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் பாலியல் குற்றவாளிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை நோக்கமாக கொண்ட இந்தப் பாடல் வீடியோ வைரலாகி வருகிறது.
» ‘அவர்கள் சக நடிகர்கள் மட்டுமே...’ - பிரபாஸ் திருமண நிச்சயம் குறித்து நண்பர்கள் விளக்கம்
» இந்தியில் ‘கேஜிஎஃப் 2’ சாதனை முறியடிப்பு - ‘பாகுபலி 2’ வசூலை நோக்கி முன்னேறும் ‘பதான்’
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago