டாடா Review: கவனத்துக்குரிய ஜாலி கலந்த உணர்வுபூர்வ டிராமா!

By கலிலுல்லா

கவின், அபர்ணா தாஸ் இருவரும் கல்லூரிக் காதலர்கள். இவர்களின் காதல் சின்னமாக அபர்ணா தாஸ் கர்ப்பமடைகிறார். இதையறிந்த கவின், உடனே கருவைக் கலைக்கச் சொல்லி வலியுறுத்துகிறார். இதற்கு அபர்ணா மறுப்பு தெரிவிக்க, இந்த விவகாரம் இருவரின் வீட்டுக்கும் தெரிய வருகிறது. பிரச்சினை பூதாகரமாக வெடிக்க, அவர்கள் வீட்டில் இதை ஏற்றுக்கொண்டார்களா? இல்லையா? இந்தச் சம்பவத்திற்கு பிறகு இருவரின் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறுகிறது? தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை எமோஷனல் கனெக்ட்டுடன் சொல்லும் படம் தான் ‘டாடா’.

கல்லூரி மாணவனாகவும், குழந்தைக்கு தந்தையாகவும் இரண்டு வெவ்வேறு பரிணாமங்களில், அதற்கேயுண்டான நடிப்பை கச்சிதமாக வழங்கியிருக்கிறார் கவின். இப்படத்தின் மூலம் தன்னை அழுத்தமான நடிகராக பதியவைக்கும் அவர், உணர்ச்சிபூர்வமான காட்சிகளில் பார்வையாளர்களை கலங்கடிக்கிறார். கவினுக்கு ‘டாடா’ நடிப்பில் புதிய மைல்கல்.

முதல் பாதியில் பெரிய அளவில் வேலையில்லை என்றாலும் அபர்ணா தாஸுக்கும், கவினுக்குமான கெமிஸ்ட்ரி பொருந்துகிறது. இரண்டாம் பாதியில் குறிப்பாக இறுதிக் காட்சியில் தன்னுடைய நடிப்பால் கவனம் பெறுகிறார் அபர்ணா.

நடிகர்கள் வீடிவி கணேஷ், ஹரீஷ், பிரதீப் குமார் 3 பேரும் அவ்வப்போது சிரிப்புக்கு உத்தரவாதம் கொடுக்க முயல்கின்றனர். ஹரீஷ் போல ஒரு நண்பர் இல்லையே என ஏங்க வைக்கும் அளவிற்கு அவரது கதாபாத்திரம் அழுத்தமாகவே எழுதப்பட்டுள்ளது. தவிர பாக்யராஜ், ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நடிப்பின் மூலம் நியாயம் சேர்க்கின்றனர்.

முதல் படத்திற்கான சாயலே தெரியாத வகையில் நேர்த்தியான படைப்பை எமோஷனலாக கொடுக்க முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் கணேஷ்.கே.பாபு. காமெடி வேணுமா காமெடி இருக்கு, காதல் வேணுமா காதல் இருக்கு, எமோஷனல் வேணுமா அதுவும் இருக்கு என எல்லாவற்றையும் கலந்து கட்டி மிகையின்றி பார்வையாளர்களுக்கு கடத்தியிருக்கிறார் இயக்குநர்.

படம் தொடங்கி முதல் 20 நிமிடங்கள் பொறுமையாகவே நகர்கிறது. தொடர்ந்து வரும் 2 பாடல்களுமே ரிங் அடிக்காத தொலைபேசியை எடுக்க தூண்டுகிறது. கதையை கட்டமைக்க அவர்கள் எடுத்துக்கொள்ளும் இந்த நேரம் அயற்சி கொடுக்காமலில்லை. ஆனாலும், தொடர்ந்து படம் அதன் போக்கில் நகரும்போது, திரைக்கதை சூடுபிடிக்கிறது.

பெற்றோர்களின் துணையின்றி காதலித்து, திருமணம் செய்யும் தம்பதிகள் வாழ்க்கையில் எப்படியான சிரமங்களை எதிர்கொள்கிறார்கள், அவர்களுக்குள் இருக்கும் ஈகோ, அட்டிடியூட், சில எமோஷனல்கள் என படத்தின் சிக்கலில்லாத கோர்வையும், அது கடத்தும் உணர்வும், ‘உங்களால நாங்க நல்லாருக்கணும், ஆனா உங்கள விட நல்லாருக்ககூடாது’ போன்ற வசனங்களும் ஈர்ப்பு.

ஜென் மார்ட்டின் பின்னணி இசை காமெடிக்காட்சிகளிலும், எமோஷனல் காட்சிகளிலும் அதற்கான உணர்வை தக்கவைக்கிறது. வசனமில்லாத காட்சிகளில் வெறும் தன்னுடைய பிஜிஎம் வழியாக கலங்கவைத்து காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறார். எழில் அரசின் ஒளிப்பதிவில் காட்சிகள் கவர்கின்றன.

தந்தை - மகனுக்கான பாசம், உருகவைக்கும் க்ளைமாக்ஸ் காட்சிகளில் படம் ஸ்கோர் செய்தாலும், கவின் கதாபாத்திரத்தின் மனமாற்றம் அழுத்தமாக சொல்லப்படாமல் கடக்கிறது. வெறும் மான்டேஜ் காட்சி மூலம் நிகழும் மனமாற்றமும், குழந்தையை விட்டு அபர்ணா தாஸ் பிரிந்து செல்வதற்கு சொல்லப்படும் காரணமும் பலவீனம்.

மொத்தத்தில், சில குறைகள் இருந்தாலும், ஜாலியான, அதேசமயம் எமோஷனல் டிராமாவாக உருவாயிருக்கும் ‘டாடா’ குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்ற லேபிளுக்கு சளைத்ததல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

மேலும்