‘பணம்... உலகை காலி பண்ணிடும்’ - ‘பிச்சைக்காரன் 2’ ட்ரெய்லர் வெள்ளிக்கிழமை ரிலீஸ்

By செய்திப்பிரிவு

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் ஸ்னீக்பீக் ட்ரெய்லர் வெள்ளிக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் அவரே இயக்கவும் செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றபோது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

உடல் நலம் பெற்று வரும் அவர் தற்போது ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த ட்ரெய்லர் வழக்கமான ட்ரெய்லராக இல்லாமல், படத்தின் முதல் 4 நிமிட காட்சிகள் ஸ்னீக்பீக்காக நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என குறிப்பிட்டுள்ள விஜய் ஆண்டனி, “பணம் உலகை காலி பண்ணிடும்” என்றும் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்