பிப்.10-ல் ஓடிடியில் ஹன்சிகாவின் திருமண வீடியோ - கவனம் ஈர்க்கும் ட்ரெய்லர்

By செய்திப்பிரிவு

ஹன்சிகாவின் திருமண வீடியோவான ‘லவ் ஷாதி டிராமா’ வரும் பிப்ரவரி10-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது. இதன் ட்ரெய்லர் தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.

தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி. இந்திப் படம் ஒன்றில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஹன்சிகா, தமிழில் விஜய், தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சோஹேல் கதுரியாவை திருமணம் செய்ய உள்ளார்.

இவர்களது திருமணம் கடந்த டிசம்பர் 4-ம் தேதி ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அரண்மனையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், இந்நிலையில், இவர்களின் திருமண விடியோ ‘லவ் ஷாதி டிராமா’என்கிற பெயரில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பிப்ரவரி 10-ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது இதன் ட்ரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.கலகலப்பான நடனம், ஆட்டம் பாட்டத்துடனும் திரைப்படத்தினைப் போலவே பல உணர்ச்சிகளை கொண்டதாக இந்த வீடியோ உருவாகியுள்ளது. ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்