எஸ்.ஆர்.பிரபாகரனின் றெக்கை முளைத்தேன்

By செய்திப்பிரிவு

சசிகுமாரின் ‘சுந்தரபாண்டியன்’,‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்ரியன்’, ‘கொம்பு‌ வெச்ச சிங்கம்டா’ ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இவர்‌ பங்கஜம் ட்ரீம்ஸ் புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் இயக்கியுள்ள படத்துக்கு ‘றெக்கை முளைத்தேன்’ என்று தலைப்பு வைத்துள்ளார். இதில் தான்யா ரவிச்சந்திரன் நாயகியாக நடித்துள்ளார். க்ரைம் த்ரில்லர் படமான இதில், ஜெயப்பிரகாஷ், ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், ஜீவா ரவி, மீரா கிருஷ்ணன் உட்பட பலர் நடித்துள்ளனர். கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவு செய்கிறார். தீசன் இசை அமைத்துள்ளார்.

படம் பற்றி எஸ்.ஆர்.பிரபாகரன் கூறும்போது, “கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. நல்ல கதைகளை கமர்சியலாக பதிவுசெய்ய விரும்புகிறேன். அதற்காகத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளேன். புதிய இயக்குநர்களையும் அறிமுகப்படுத்த உள்ளேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்