பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘தண்டகாரண்யம்’ டைட்டில் லுக்

By செய்திப்பிரிவு

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் ‘தண்டகாரண்யம்’ படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு அதியன் ஆதிரை இயக்கத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் உருவான படம் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற இந்தப்படத்திற்கு டென்மா இசையமைத்திருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆதியன் ஆதிரை இயக்கும் இரண்டாவது படத்திற்கு ‘தண்டகாரண்யம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

‘அட்டகத்தி’ தினேஷ், கலையரசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் படத்தொகுப்பை செல்வா ஆர்.கே. கவனிக்கிறார். உமாதேவி, அறிவு, தனிகொடி, ஆகியோர் பாடல்களை எழுதுகின்றனர்.

இந்நிலையில், படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. துப்பாக்கிக்கு பின்புறமாக காவல் துறையினர் சிலர் நடந்து வருவது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்