வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விடுதலை’ படத்தில் இளையராஜா இசையில் நடிகர் தனுஷ் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படம் ‘விடுதலை’. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை அமைத்து இருக்கிறார். கடந்த ஆண்டு ‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களுக்கான படப்பிடிப்பும் நிறைவடைந்தது. 'விடுதலை' முதல் பாகத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் இளையராஜா இசையில் தனுஷ் பாடல் ஒன்றை பாடியுள்ளார். ‘உன்னோட நடந்தா’ என தொடங்கும் அந்தப்பாடல் வரும் பிப்ரவரி 8-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றையும் இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago