இயக்குநர் டி.பி.கஜேந்திரன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி; திரையுலகினர் இரங்கல்

By செய்திப்பிரிவு

பிரபல இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72. கே.பாலசந்தர், விசு, ராமநாராயணன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய டி.பி.கஜேந்திரன், ‘வீடு மனைவி மக்கள்' படம் மூலம் இயக்குநர் ஆனார்.

இதில் விசு, எஸ்.வி.சேகர், சீதாஉட்பட பலர் நடித்திருந்தனர். தொடர்ந்து, ராமராஜன் நடித்த ‘எங்க ஊரு காவக்காரன்',கார்த்தி நடித்த ‘பாண்டி நாட்டுத் தங்கம்', ராமராஜன் நடித்த ‘எங்க ஊரு மாப்பிள்ளை', பிரபு நடித்த ‘நல்ல காலம் பொறந்தாச்சு', ரமேஷ் அரவிந்த் நடித்த ‘பாட்டு வாத்தியார்', பிரபு நடித்த ‘பட்ஜெட் பத்மநாபன்', ‘மிடில் கிளாஸ் மாதவன்’, ‘பந்தா பரமசிவம்’, பிரசன்னா நடித்த ‘சீனா தானா' உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். பெரும்பாலும் குடும்பக் கதைகொண்ட ஜனரஞ்சக படங்களை இயக்கியவர் டி.பி.கஜேந்திரன். அந்தப் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.

‘பாரதி', ‘பம்மல் கே.சம்பந்தம்’, ‘பேரழகன்’, ‘மன்மதன்’, ‘குசேலன்’, ‘வில்லு’ உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக உடல்நலமில்லாமல் இருந்த டி.பி.கஜேந்திரன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் வீடு திரும்பிய நிலையில், அவர் நேற்று காலமானார்.

சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் அவர்உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில்சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அமைச்சர் மா.சுப்பிரமணியன், வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சிஎஸ்.முருகன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

நடிகர்கள் ராதாரவி, செந்தில், கவுண்டமணி, இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி, ரமேஷ் கண்ணா உட்பட ஏராளமான திரையுலகினரும் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த டி.பி.கஜேந்திரனின் இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது. அவருக்கு புவனா என்றமனைவி மற்றும் 4 மகள்கள்உள்ளனர். பழம்பெரும் நடிகை டி.பி.முத்துலட்சுமியின் வளர்ப்பு மகன் கஜேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

என் கல்லூரி தோழர்: முதல்வர் இரங்கல்: டி.பி.கஜேந்திரன் மறைவுக்கு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘இயக்குநரும், நடிகரும், எனது கல்லூரி தோழருமான டி.பி.கஜேந்திரன் மறைந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

பல வெற்றி படங்களை அவர் இயக்கி உள்ளார். பல்வேறு திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றி கலை உலகுக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிவந்தவர். 2021 செப்டம்பரில் அவரை நேரில்சென்று நலம் விசாரித்து வந்தேன். தற்போது உடல்நலக்குறைவால் அவர் காலமாகி இருப்பது வேதனை அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மு.பெ. சாமிநாதன் : இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் காலமானார் என்ற செய்தி அறிந்து மனவருத்தம் அடைந்தேன். அவர் குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

நாம் தமிழர் கட்சித் தலைமைஒருங்கிணைப்பாளர் சீமான்: குறைந்த செலவில் பல வெற்றிப்படைப்புகளை தந்தபெருமைக்குரிய திரைக் கலைஞர் கஜேந்திரனின் மறைவு தமிழ்த் திரைத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்