'விஜய் 67' பட டிஜிட்டல் உரிமத்தை வசப்படுத்தியது நெட்ஃப்ளிக்ஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் ‘விஜய் 67’ என அறியப்படுகிறது. இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளமும், சாட்டிலைட் உரிமத்தை சன் டிவியும் பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ் திரைத் துறையின் உச்ச நடிகர்களில் ஒருவரான விஜய் நடித்து வரும் ‘விஜய் 67’ படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. இந்தப் படத்தின் அப்டேட் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்த காரணத்தால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செல்லும் இடமெல்லாம் அது குறித்து கேள்வி எழுப்பட்டது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக தயாரிப்பு நிறுவனம் அப்டேட்களை அளவில்லாமல் பகிர்ந்து வருகிறது. அது ரசிகர்களே போதும், போதும் என சொல்ல வைக்கும் அளவிற்கு உள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், நடன இயக்குநர் சாண்டி, நடிகை ப்ரியா ஆனந்த், நடிகர் அர்ஜுன், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், மலையாள சினிமா நடிகர் மேத்யூ தாமஸ், சஞ்சய் தத் மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிக்கின்றனர். படத்திற்கான இசையை அனிருத் அமைக்கிறார். படப்பிடிப்பு பணிகள் கடந்த ஜனவரி 2-ம் தேதி துவங்கியது.

இந்தச் சூழலில் இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமும், சாட்டிலைட் உரிமத்தை சன் டிவியும் பெற்றுள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

50 mins ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்