சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘விஜய் 67’ பட பூஜை வீடியோவை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ் திரைத் துறையின் உச்ச நகடிகர்களில் ஒருவரான விஜய் நடித்து வரும் புதிய படம் ‘விஜய் 67’ என அறியப்படுகிறது. இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. இந்தப் படத்தின் அப்டேட் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வரும் நிலையில், அது குறித்த தகவல்களை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக கடந்த சில தினங்களாக பகிர்ந்து வருகிறது.
அந்த வகையில் இந்தப் படத்தில் நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், நடன இயக்குநர் சாண்டி, நடிகை ப்ரியா ஆனந்த், நடிகர் அர்ஜுன், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், மலையாள சினிமா நடிகர் மேத்யூ தாமஸ், சஞ்சய் தத் மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிக்கின்றனர். படத்திற்கான இசையை அனிருத் அமைக்கிறார். படப்பிடிப்பு பணிகள் கடந்த ஜனவரி 2-ம் தேதி துவங்கியது. இருந்தும் விஜய் நடித்த வாரிசு பட வெளியீடு காரணமாக அது குறித்த தகவல்கள் சஸ்பென்சாக இருந்தன.
இந்தச் சூழலில் தயாரிப்பு நிறுவனம் தற்போது ‘தளபதி 67’ படத்தின் பூஜை நிகழ்வு வீடியோவை பகிர்ந்துள்ளது. இதில் படக்குழுவினர் மட்டுமல்லாது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago