விதார்த், பாரதிராஜா நடித்த ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய நித்திலன் அடுத்து இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார்.
பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நட்டி நட்ராஜ், முனிஸ்காந்த், அருள்தாஸ், ‘பாய்ஸ்’ மணிகண்டன் உட்பட பலர் நடிக்கின்றனர். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு அஜ்னீஸ் லோக்நாத் இசை அமைக்கிறார்.
படம்பற்றி இயக்குநர் நித்திலன் கூறும்போது, ‘இது ஆக்ஷன் டிராமா கதையை கொண்ட படம். சாதாரண மனிதனுக்கு நடக்கும் சம்பவம் அவனை என்ன செய்ய வைக்கிறது என்பது கதை. பழிவாங்கும் கதை என்றும் சொல்லலாம். வில்லனுக்கு கதையில் முக்கியத்துவம் இருப்பதால், சில முன்னணி நடிகர்களுடன் பேசி வருகிறோம். சென்னையில் இன்று படப்பிடிப்பு தொடங்குகிறது. ஹீரோயின் முடிவாகவில்லை. பேச்சுவார்த்தை நடந்துவருகிறது” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago