காஷ்மீருக்கு பறந்த ‘விஜய் 67’ படக்குழு - வைரலாகும் த்ரிஷா புகைப்படங்கள்

By செய்திப்பிரிவு

நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘விஜய் 67’ படக்குழுவினர் படப்பிடிப்புக்காக தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், த்ரிஷாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

விஜய்யின் ‘வாரிசு’ படம் கடந்த ஜனவரி 11-ம் தேதி பொங்கலையொட்டி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் கைகோக்கிறார். ‘விஜய் 67’ என அழைக்கப்படும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. இசையமைப்பாளராக அனிருத் இணைந்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. கடந்த ஜனவரி 2-ஆம் தேதி இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்தது.

படத்தின் தொழில்நுட்ப குழுவினர் அறிவிக்கப்பட்ட நிலையில் யார் யார் நடிக்கிறார்கள் என அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், பிரித்விராஜ் சுகுமாறன், த்ரிஷா, மன்சூர் அலிகான், அர்ஜுன் சர்ஜா, மிஷ்கின் ஆகியோரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் இன்று காலை படக்குழுவினர் ஸ்ரீநகர் புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன், நடிகை திரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்டோரும் காஷ்மீர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள விமானத்தில் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்