‘ஸ்பிளிட் ஸ்கிரீன்’ ஐடியா தோன்றியது எப்படி? - ‘பிகினிங்’ இயக்குநர்

By செய்திப்பிரிவு

ஒரே திரையில், 2 கதைகள் என்ற, ஆசியாவின் முதல் ‘ஸ்பிளிட் ஸ்கிரீன்’ படமாக வெளியாகி இருக்கிறது ‘பிகினிங்’. வினோத் கிஷன், கவுரி கிஷன், ரோகிணி, மகேந்திரன் உட்பட பலர் நடித்த இந்தப் படத்தை, இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படம் பற்றி இதன் இயக்குநர் ஜெகன் விஜயா கூறியதாவது: நான் வேலை பார்த்த நிறுவனத்தில் சிசிடிவி காட்சிகளை கண்காணிக்கும் பணி எனக்கு கொடுக்கப்பட்டது. அதைக் கவனித்துக் கொண்டிருப்பேன். இடம், வலம் என அடிக்கடி மாறி மாறி பார்த்துக்கொண்டிருப்பேன்.

அப்போதுதான் ஒரே திரையில், 2 கதைகள் என்ற ஐடியா தோன்றியது. பிறகு படம் இயக்க முயன்றபோது தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை. என் குடும்பத்தினர், நண்பர்கள் உதவியுடன் போராடி தயாரித்து முடித்தேன்.

திருப்பதி பிரதரஸ் வெளியிட்டுள்ளது. வினோத் கிஷனின் ‘ஸ்பெஷல் சைல்ட்’ கேரக்டருக்கு ‘ரெஃபரன்ஸ்’ ஏதும் இல்லை. படத்தில் அனைவருமே சிறப்பாக நடித்தார்கள். இப்போது படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு ஜெகன் விஜயா கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE