ராம் இயக்கத்தில் சிவா... கவனம் ஈர்க்கும் ‘காம்போ’ - விரைவில் படப்பிடிப்பு

By செய்திப்பிரிவு

இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர் சிவா நடிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘கற்றது தமிழ்’,‘தங்க மீன்கள்’,‘தரமணி’ ‘பேரன்பு' உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம் மலையாள நடிகர் நிவின்பாலியுடன் இணைந்து ‘ஏழு கடல், ஏழு மலை’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் அஞ்சலி, சூரி, உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில், இயக்குநர் ராம் அடுத்தாக

‘சென்னை 28’, ‘தமிழ்ப் படம்’ மூலம் கவனம் பெற்ற நடிகர் சிவாவுடன் இணைகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்வரி முதல் வாரம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

இயக்குநர் ராம் மனித உணர்வுகளை அடிப்படையாக கொண்ட கதைகளை இயக்குபவர், சிவாவை பொறுத்தவரை காமெடி நடிகராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருப்பவர். இந்நிலையில், இருவரும் இணையும் புதிய படம் ரசிகர்களிடையே ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

மேலும்