சென்னை: ரஜினி, கமலுடன் பணியாற்றிய பிரபல சண்டைப்பயிற்சி இயக்குநர் ஜூடோ ரத்னம் காலமானார். அவருக்கு வயது 93.
70 மற்றும் 80-களில் தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பலருக்கும் சண்டைப்பயிற்சி கற்றுக்கொடுத்தவர் ஜூடோ கே.கே.ரத்னம். இதுவரையில் 1500 படங்களுக்கு மேல் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார் ரத்னம். பொதுவாக ரஜினி என்றாலே ஜூடோ ரத்னம்தான் என சொல்லும் அளவுக்கு புகழ்பெற்றவர். இதுவரையில் ரஜினியின் 46 படங்களுக்கு ஜூடோ ரத்னம்தான் சண்டை இயக்குநராக இருந்திருக்கிறார்.
இறுதியாக 1992-ம் ஆண்டு வெளியான ‘பாண்டியன்’ படம் வரையில் அவர் சண்டை இயக்குநராக பணியாற்றியுள்ளார். தவிர, ‘தாமரைக்குளம்’, ‘கொஞ்சும் குமரி’, ‘போக்கிரி ராஜா’, ‘தலைநகரம்’ ஆகிய படங்களில் நடித்தும் இருக்கிறார். 1200க்கும் மேற்ப்பட்ட படங்களுக்கு சண்டைப்பயிற்சியாளராக பணியாற்றியதால் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் அவர் பெயர் இடம்பெற்றுள்ளது. 2019-ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றிருக்கிறார் ஜூடோ ரத்னம்.
இந்நிலையில், இன்று உடல்நலக்குறைவால் ஜூடோ ரத்னம் அவரது சொந்த ஊரான குடியாத்தத்தில் காலமானார். 93 வயதான அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக ஸ்டண்ட் யூனியன் சங்க அலுவலகத்தில் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது உடல் குடியாத்தத்தில் நல்லடக்கம் செய்யபட உள்ளது. ஜூடோ ரத்னம் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago