'நீங்கள் கேட்டது விரைவில் நடக்கும்' என கூறி 'தி லெஜண்ட்' படத்தின் ஓடிடி வெளியீட்டுக்கு சரவணன் அருள் 'லீ'ட் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளரும், தொழிலதிபருமான சரவணன் அருள் நடித்து, தயாரித்திருக்கும் ‘தி லெஜெண்ட்’ படம் கடந்த ஆண்டு ஜூலை 28ம் தேதி தியேட்டரில் வெளியானது. விவேக், பிரபு, சுமன், நாசர், யோகி பாபு, யாஷிகா ஆனந்த், ஊர்வசி ரவுடேலா என பல நடிகர்கள் நடித்திருந்த இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.
ஜேடி, ஜெர்ரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 'பான் இந்தியா' படமாக வெளியானது. படம் வெளியாகி 6 மாதம் கடந்துவிட்ட நிலையில், ஓடிடி வெளியீடு குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில், லெஜண்ட் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்பானவர்களே நீங்கள் கேட்டது நடக்கும்…வெகுவிரைவில்” என பதிவிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
» நம் பிள்ளைகளுக்கு விவசாயத்தின் முக்கியத்துவத்தை சொல்லிக்கொடுப்போம் - கார்த்தி
» பாலிவுட் சாதனை - உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.100 கோடி வசூலித்த ஷாருக்கானின் பதான்
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago