தெறிக்கும் ஆக்‌ஷனில் மறைந்திருக்கும் காதல் - ‘மைக்கேல்’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

சந்தீப் கிஷனுடன் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் ‘மைக்கேல்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் படம், ‘மைக்கேல்’. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படம், பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது. படத்தில் சந்தீப் கிஷனுடன் விஜய் சேதுபதி சிறப்பு வேடத்தில் நடித்திருக்கிறார். கவுதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்துள்ளார். நாயகியாக திவ்யன்ஷா கவுசிக் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார், வருண் சந்தேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். பிப்ரவரி மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - கவுதம் வாசுதேவ் மேனன் குரலுடன் தொடங்கும் படத்தின் ட்ரெய்லரின் தொடக்க காட்சிகள் சில சிகப்பு நிற லைட்டிங்கில் ஒளிர்கிறது. அடுத்து வரும் விஜய் சேதுபதியின் ‘மாஸ்’ தோற்றம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறது. தொடர்ந்து நீளும் சண்டை, கத்திக்குத்து காட்சிகள் படத்தின் பாணியை (genre) வெளிப்படுத்துகின்றன.

படம் ஆக்‌ஷன் டிராமாவாக இல்லாமல், அழகிய காதல் கதை ஒன்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதை, ‘ஆமா இதெல்லாம் ஒரு பொண்ணுக்காகத்தான் பண்ணேன்’ என நாயகன் சந்தீப் கிஷன் சொல்லும் வசனம் உணர்த்துகிறது. ‘நெருப்பு ஈர்க்கும்; பக்கத்துல போனா மொத்தமாக எரிச்சிடும்’ போன்ற வசனங்கள் ஈர்ப்பு. இறுதியில் வரும் சந்தீப் கிஷனின் பள்ளி மாணவனுக்கான தோற்றமும், அதற்கான அவரது உடல் எடைக்குறைப்பும் கவனம் பெறுகின்றன. படம் பிப்ரவரி 3 திரையரங்குகளில் வெளியாகிறது. ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

33 mins ago

சினிமா

47 mins ago

சினிமா

55 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்