‘நேரம்' மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அவர் இயக்கிய 'பிரேமம்' வரவேற்பைப் பெற்றது. 7 வருடத்துக்குப் பின் அவர் இயக்கிய 'கோல்டு' கடந்த மாதம் வெளியானது. சமூக வலைதளத்தில் அவரிடம் ரசிகர் ஒருவர், ‘அஜித்துடன் ஒரு படம் பண்ணுங்கள்’ என்று கேட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள அவர், “அஜித்தை இதுவரை சந்திக்க முடியவில்லை. நிவின் (பாலி) ஒருமுறை ‘பிரேமம்’ படம் அவருக்குப் பிடித்துள்ளதாகக் கூறியிருந்தார். பிறகு, 10 முறை அவரின் மேலாளரிடம் அஜித்தை சந்திக்கக் கேட்டு, இப்போது 8 வருடம் முடிந்துவிட்டது.
எனக்கு வயதாவதற்குள் அவரைப் பார்த்தால் படம் பண்ணுவேன். ஒவ்வொரு முறையும் நீங்கள் இந்த கேள்வியை கேட்கும்போது எனக்கு எவ்வளவு வலிக்கும். நான் முயற்சி செய்து சோர்ந்துவிட்டேன். அவரை வைத்து படம் எடுத்தால் ஹாலிவுட், கோலிவுட் திரையரங்குகளில் 100 நாள் ஓடும். இதே மாதிரிதான் உலகநாயகன், சூப்பர் ஸ்டார், தளபதியுடனும்” என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago