வாரிசு படத்தில் நடித்தது ஏன்? - ராஷ்மிகா மந்தனா விளக்கம்

By செய்திப்பிரிவு

விஜய் நடித்து கடந்த 11ம் தேதி வெளியான படம், ‘வாரிசு’. தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில், வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ளார். இதில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம், சரத்குமார் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றிருந்தாலும் 7 நாளில் ரூ.210 கோடி வசூலித்ததாகத் தயாரிப்பு தரப்பு தெரிவித்திருந்தது.

இதில் ராஷ்மிகா மந்தனாவுக்கு முக்கியத்துவம் கொண்ட பாத்திரம் இல்லை. இருந்தும் இதில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “இந்தப் படத்தில் எனக்கு 2 பாடல் காட்சிகள் தவிர வேறு ஏதும் இல்லை என்று தெரியும். கதையில் எனக்கு முக்கியத்துவம் இல்லை என்பதை அறிந்திருந்தேன். ஆனாலும் இந்தப் படத்தை ஏற்றுக்கொண்டது, நடிகர் விஜய்க்காகத்தான். அவருடன் நடிக்க வேண்டும் என்பதால் ஒப்புக்கொண்டேன். ஒரு நடிகையாக, எல்லா வகையான பாத்திரங்களிலும் கமர்சியல் படங்களில் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.அந்த வகையில் இது சரிதான். ஒரே மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்பவில்லை” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்