நடிகர் வடிவேலுவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சு.வெங்கடேசன் எம்.பி

By செய்திப்பிரிவு

நடிகர் வடிவேலுவை மதுரை எம்பி சு.வெங்கடேசன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகராக உள்ள வடிவேலுவின் குடும்பத்தினர் மதுரையில் வசித்து வருகின்றனர். வடிவேலுவின் தாய் சரோஜினி (87) வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், கடந்த 19-ம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி மதுரை விரகனூரில் மரணம் அடைந்தார். இவரது மரணம் வடிவேலுவின் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடிவேலு தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்தனர்.

இந்த நிலையில், நடிகர் வடிவேலுவை மதுரை எம்பி சு.வெங்கடேசன் எம்பி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "திரைக்கலைஞர் வடிவேலு அவர்களின் தாயார் சரோஜினி அம்மையாரின் மறைவையொட்டி இன்று அவரது இல்லத்திற்கு சென்று ஆறுதல் தெரிவித்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்