காதல் + காமெடி ட்ராமா  - சந்தானத்தின் ‘கிக்’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

சந்தானம் நடிக்கும் ‘கிக்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

ஃபார்ச்சூன் பிலிம்ஸ் ( FORTUNE FILMS ) சார்பில் நவீன்ராஜ் தயாரிப்பில் நடிகர் சந்தானம் நாயகனாக நடிக்கும் திரைப்படம் 'கிக்'. கன்னடத்தில் வெளியான 'லவ்குரு', 'கானா பஜானா' , 'விசில்', 'ஆரஞ்ச்' போன்ற படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதன் மூலம் அவர் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு, சென்னை, பாங்காக் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. படத்தில், சந்தானத்தின் ஜோடியாக, 'தாராள பிரபு' படத்தில் நடித்த தான்யா ஹோப் (tanya hope) நடிக்கிறார். தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், மன்சூர் அலிகான், மனோபாலா, Y.G.மகேந்திரன், ஷகிலா, கூல் சுரேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி?

முழுநீள காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் விஷூவல்ஸ் பிரமாண்டமான முறையில் ஈர்க்கிறது. கூடவே நடிகர் சந்தானத்தின் ஸ்கிரீன் பர்சனஸ் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. காதல்+காமெடியாக இப்படம் உருவாகியிருப்பதை ட்ரெய்லரின் காட்சிகளும் வசனங்களும் பிரதிபலிக்கின்றன. ‘கால்ல ஈரம் படாம கடலக்கூட தாண்டிடலாம்; ஆனா கண்ல ஈரம்படாம காதல தாண்ட முடியாது’ போன்ற வசனங்கள் கவனம் பெறுகின்றன. ஆனாலும் மொத்த ட்ரெய்லரின் ஈர்க்கும் காமெடியும், அழுத்தமான கதைக்கான லீட் எதுவுமில்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

32 mins ago

சினிமா

46 mins ago

சினிமா

54 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்