நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணையும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்?

By செய்திப்பிரிவு

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் ‘தீனா’, ‘ரமணா’, ‘கஜினி’, ‘துப்பாக்கி’ ‘7ஆம் அறிவு’ ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். கடைசியாக இவர் ரஜினியை வைத்து ‘தர்பார்’ படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு இவர் நடிகர் விஜய்யுடன் 65-வது படத்தில் இணைவதை உறுதி செய்தார். ஆனால், அது கைவிடப்பட்டது. இவரது கதையான ‘ராங்கி’ சமீபத்தில் த்ரிஷா நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்த நிலையில், இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’, ‘அயலான்’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே சிவகார்த்திகேயனும் முருகதாசும் இணைந்து படம் செய்ய இருந்த நிலையில் தற்போது அது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என தகவல் வெளியாகியுள்ளது. படத்தை மதுவின் லைட் ஹவுஸ் மூவி தயாரிக்க இருக்கிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE