ஷாருக்கான் பட ஷூட்டிங்: விஜய் சேதுபதி பதட்டம்

By செய்திப்பிரிவு

அட்லீ இயக்கத்தில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் ஹீரோவாக நடித்து வரும் படம், ‘ஜவான்’. இந்தப் படம் மூலம் நயன்தாரா இந்தியில் அறிமுகமாகிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். சான்யா மல்கோத்ரா, சுனில் குரோவர் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படம் பான் இந்தியா முறையில் உருவாகிறது. இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது:

ஷாருக்கான் இனிமையான மனிதர். அவர் பெரிய நடிகர். ‘ஜவான்’ படப்பிடிப்பில் நான் முதல் நாள் கலந்துகொண்ட போது பதட்டமாக இருந்தது. அன்று அவருடன் எனக்குக் காட்சிகள் இல்லை என்றாலும் அவர் உடன் இருந்தார். பிறகு என்னை சகஜ நிலைக்கு கொண்டு வந்தார். என்னை வசதியாக உணர வைத்தார். அவர் ஜென்டில்மேன். அவருடன் நடித்த நாட்கள் மகிழ்ச்சியானவை. இவ்வாறு விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்