விஜய் ஆண்டனி, ‘பிச்சைக்காரன் 2’ படத்தைத் தயாரித்து, இசை அமைத்து, நடித்து வருகிறார். இந்தப் படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். அவர் ஜோடியாக காவ்யா தாப்பர் நடிக்கிறார்.
இந்தப் படத்துக்கான, பாடல் காட்சி லங்காவி தீவில் நடந்து வந்தது. கடலுக்குள் செலுத்தும் ‘ஜெட் ஸ்கை’ எனப்படும் பைக்கில் விஜய் ஆண்டனியும் காவ்யா தாப்பரும் செல்வதுபோல நேற்று முன்தினம் படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக மற்றொரு, ‘ஜெட் ஸ்கை’ வாகனத்தின்மீது, விஜய் ஆண்டனியின் வாகனம் பயங்கரமாக மோதியது. இதில் விஜய் ஆண்டனியின் முகத்தில் காயம் ஏற்பட்டது. அவர் உதடு, பற்களில் பலத்த காயம் ஏற்பட்டன. காவ்யா தாப்பர் காயமின்றி தப்பினார்.
உடனடியாக படக்குழுவினர், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மனைவி உள்ளிட்டோர் நேற்று கோலாலம்பூர் சென்றுள்ளார்.
இந்நிலையில் விஜய் ஆண்டனி இன்று மாலை சென்னை அழைத்து வரப்படுகிறார். “சென்னை மருத்துவமனை ஒன்றில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது. அவர் நலமாக இருக்கிறார்” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 mins ago
சினிமா
18 mins ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago